CWC 5ல் கலந்துகொள்ளும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் லிஸ்ட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வீடியோ இதோ
குக் வித் கோமாளி சீசன் 5
விஜய் தொலைக்காட்சியில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த குக் வித் கோமாளி சீசன் 5 வருகிற 27ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த சீசன் 5ல் கலந்துகொள்ளப்போகும் கோமாளி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருந்தனர்.
இதில் புகழ், குரேஷி, சுனிதா, சரத் உள்ளிட்ட பழைய கோமாளிகளுடன் இணைந்து ராமர், வினோத், நாஜில் விஜயன் உள்ளிட்ட புது கோமாளிகளும் களமிறங்கியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.
போட்டியாளர்கள் லிஸ்ட்
இதில் பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இர்பான், திவ்யதுரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் குமார், நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதோ அந்த வீடியோ..

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு! IBC Tamilnadu
