துவங்கியது குக் வித் கோமாளி சீசன் 6.. எண்ட்ரி கொடுத்த பிக் பாஸ் சௌந்தர்யா, இதோ
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 6வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
கடந்த குக் வித் கோமாளி சீசனில் நடந்த மாற்றங்கள் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. வெங்கடேஷ் பட், மணிமேகலை போன்றவர்களின் வெளியேற்றமும் இதற்கு காரணம்.
சீசன் 6
இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளது. அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. ஆம், குக் வித் கோமாளி சீசன் 6ன் முதல் ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் வழக்கம் போல் புகழ், ராமர், தங்கதுரை, சரத் மற்றும் தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் உள்ளனர். ஆனால், அனைவரும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளி சீசன் 6ல் பிக் பாஸ் 8 போட்டியாளர் சௌந்தர்யா எண்ட்ரி கொடுத்துள்ளார். இதோ நீங்களே பாருங்க..