குக் வித் கோமாளி 6 டைட்டில் வின்னர் இவர்தான்.. உறுதியாக வெளிவந்த தகவல்
குக் வித் கோமாளி
ரசிகர்களின் மனம் கவர்ந்த விஜய் டிவி நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி. கடந்த இரண்டு சீசன்களில் பல மாற்றங்கள் நடந்த நிலையில், சற்று சரிவை சந்தித்தாலும் கூட குரேஷி, புகழ், ராஜு ஆகியோர் நிகழ்ச்சிக்கு கவனத்தை ஈர்த்துள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 28ஆம் தேதி பைனல் ஒளிபரப்பாக உள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜு, ஷபானா மற்றும் உமைர் ஆகிய நான்கு போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் யார் வெற்றிபெறப்போகிறார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு உள்ளது.
டைட்டில் வின்னர்
இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 6ன் வெற்றியாளர் யார் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குக் வித் கோமாளி சீசன் 6ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ராஜு. பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் மட்டுமின்றி தற்போது குக் வித் கோமாளி டைட்டிலையும் வென்றுள்ளார்.
இந்த தகவல் இமாத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் பிக் பாஸ் குறித்து உறுதியான தகவல்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Legend Cook #Raju bhai
— Imadh (@MSimath) September 25, 2025
Comali #Ramar#CWC #CookwithComali https://t.co/1u1HhsTnFR