குக் வித் கோமாளி 7வது சீசனின் தொகுப்பாளர் ரக்ஷன் இல்லையா?... யார் பாருங்க, வீடியோ

By Yathrika Apr 01, 2026 12:59 PM GMT
Report

குக் வித் கோமாளி 

கஷ்டமா இருந்தா வாங்க ஜாலியா சிரிச்சிட்டு போங்க என மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு கலகலப்பான ஷோ குக் வித் கோமாளி.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சீசன் தொடங்கப்பட்டது, அன்று தொடங்கிய இந்நிகழ்ச்சியின் பயணம் 7வது சீசன் வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

6 சீசன்கள் சேர்த்து குக் வித் கோமாளி ஷோ 250 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது. கடந்த சில நாட்களாக 7வது சீசன் பற்றிய புரொமோக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 

குக் வித் கோமாளி 7வது சீசனின் தொகுப்பாளர் ரக்ஷன் இல்லையா?... யார் பாருங்க, வீடியோ | Cooku With Comali Season 7 New Anchor

புரொமோ

முதலில் தொகுப்பாளர்கள் ரக்ஷன்-சோயா இடம்பெற குக் வித் கோமாளி புரொமோ வந்தது, அடுத்து புதிய நடுவர் ரோஜா 7வது சீசனில் களமிறங்கும் புரொமோ வந்தது.

அதேபோல் இந்த முறை போட்டியாளர்கள் டபுள் டபுளாக கலந்துகொள்ள உள்ளார்கள். அய்யனார் துணை சீரியல் அரவிந்த், பிக்பாஸ் கானா வினோத், பிக்பாஸ் சம்யுக்தா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் அவர்களின் நிஜ ஜோடியுடன் போட்டியில் களமிறங்குகின்றனர்.

குக் வித் கோமாளி 7வது சீசனின் தொகுப்பாளர் ரக்ஷன் இல்லையா?... யார் பாருங்க, வீடியோ | Cooku With Comali Season 7 New Anchor

இந்த நிலையில் குக் வித் கோமாளி 7வது சீசனின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில், தொகுப்பாளர் ரக்ஷன் இல்லை என்றும் வேறொருவர் களமிறங்குகிறார் என காட்டப்படுகிறது.

அவர் யார் என்பது தெரியவில்லை, ரசிகர்கள் மாகாபா ஆனந்த், பாலா, விஜே விஷால், ராஜு ஜெயமோகன் என பலரது பெயரை குறிப்பிட்டு வருகிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US