குக் வித் கோமாளி 7ல் புதிதாக இணைந்த நட்சத்திர ஜோடி.. யார் பாருங்க! லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 7வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இந்த முறை புது நடுவராக நடிகை ரோஜாவை கொண்டு வந்திருக்கின்றனர்.
மேலும் போட்டியாளர்களும் ஜோடிகளாகவே ஷோவில் கலந்துகொண்டிருக்கின்றனர். அறந்தாங்கி நிஷா மற்றும் அவர் கணவர், அரவிந்த் செஜு மற்றும் சங்கீதா ஜோடி, டிராவிட் செல்வம் மற்றும் ராஜி ஜோடி உள்ளிட்ட 8 ஜோடிகள் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.

புது என்ட்ரி
இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட் எண்ட்ரியாக சீரியல் நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயா ஜோடி குக் வித் கோமாளி 7ல் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர். அது ப்ரோமோவாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
தனக்கு சமைக்க தெரியாது, கணவர் சித்துவுக்கு மட்டுமே சமைக்க தெரியும் என ஸ்ரேயா கூறியுள்ளார். ப்ரோமோவை பாருங்க.