குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் நெருங்கிய உறவு தற்கொலை முயற்சி.. இவர் வாழ்க்கையில் இப்படியா
ஸ்ருதிகா
நடிகை ஸ்ருதிகா ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி மூலம் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். தனது சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை.
அதன்பின் படப்பிடிப்பு, குடும்பம் என செட்டிலாகிவிட்டார். ஆனால், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிகாவிற்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், ஸ்ருதிகாவின் தாய் கல்பனா தற்கொலை முயற்சி செய்தது குறித்து அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தனது மகளுடன் இணைந்து Youtube சேனலில் சமைத்து கலகலப்பாக பேசி வந்த அவர், தனது காதல் கதை குறித்து பேசினார்.
தற்கொலை முயற்சி
"உன்னுடைய காதல் எல்லாம் என்ன பெரிய காதல்? நானும் உங்க அப்பாவும் காதலிச்ச நேரத்துல எவ்வளவு பரபரப்பான விஷயங்கள் எல்லாம் நடந்தது தெரியுமா. நாங்க இருவரும் திருமணம் பண்ணும் போது உங்க அப்பா சங்கருக்கு 19 வயது தான். அப்போ எனக்கு 23 வயது. உங்க அப்பாவை விட நான் 4 வயது பெரியவள்.
ஆனாலும் நாங்கள் இருவரும் காதலித்தோம். எங்கள் வீட்டில் சம்மதம் தெரியவில்லை என்பதால் ஓடிப்போய்விட்டோம். அப்போது ஒரு பத்திரிகையில் சங்கர் என்பவரை ஒரு பெண் கடத்துவிட்டு சென்றதாக செய்தி வந்தது. அதை பார்த்தவுடன் நான் கடலில் விழுந்து இறந்துவிடலாம் என எண்ணினேன். அப்போது என்னை காப்பாற்றியவர் உன் தந்தை தான்.
அதன்பின் நாங்க திரும்ப எங்க வீட்டுக்கு போனோம். அங்கு போலீஸ் இருந்தாங்க, என்னை பார்த்து சங்கரை கடத்திகிட்டு போனியா என கேட்டார்கள். அதை அவரிடமே கேளுங்கள் என நான் கூறினேன். அப்போது உன் அப்பா நாங்க காதலிச்சு தான் ஓடி போனோம் என்றார்" என தனது காதல் கதை பற்றி பேசினார்.

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
