அது தப்புனு எனக்கு தெரியாது.. பெண்ணிடம் அநாகரீக செயலுக்கு கூல் சுரேஷ் மன்னிப்பு வீடியோ
நடிகர் மன்சூர் அலி கான் தற்போது சரக்கு சரக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற போது மேடையில் நடிகர் கூல் சுரேஷ் பெண் தொகுப்பாளரிடம் எல்லைமீறியது எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
அந்த பெண்ணுக்கு கூல் சுரேஷ் திடீரென மாலை போட்டதால் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நடிகர் மன்சூர் அலி கான் மேடையில் கூல் சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்தார்.
மன்னிப்பு கேட்டு வீடியோ
இந்நிலையில் இந்த விஷயத்தை தான் விளையாட்டாக செய்துவிட்டதாகவும், அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"நான் விளையாட்டாக செய்தது இப்படி ஆகி விட்டது, அந்த பெண் பெயர் கூட எனக்கு தெரியாது. மாலை போட கூடாது என்பது அதை செய்ய பிறகு தான் எனக்கு தெரிந்தது" என கூல் சுரேஷ் கூறி இருக்கிறார்.
#CoolSuresh apologizes for yesterday's #Sarakku Press meet incident.. pic.twitter.com/RLIbmVAtaj
— Ramesh Bala (@rameshlaus) September 20, 2023

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
