சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்கும் கூல் சுரேஷ்.. நடிக்க ஏங்கிய நடிகருக்கு கிடைத்த வாய்ப்பு
கூல் சுரேஷ்
சிலம்பரசனின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தின் தலைப்பை ஒவ்வொரு படத்தின் விமர்சனத்தின் போது சொல்லிக்கொண்டே இருந்தவர் நடிகர் கூல் சுரேஷ்.
திரையரங்கிற்கு வெளியே படம் பார்த்து வந்தவுடன், ' வெந்து தணிந்தது காடு படத்துக்கு வணக்கத்த போடு' என்று இவர் சொல்வதை காணவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
நடிக்க கிடைத்த வாய்ப்பு
அப்படி வெந்து தணிந்தது காடு படத்தை முலைமுடுக்கெங்கும் கொண்டு சேர்ந்தவர்களில் ஒருவர் கூல் சுரேஷ். இவர் சில நாட்களுக்கு தனக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைவில்லை என்று கூறி வேதனை பட்டார்.
இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷை தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைத்துள்ளாராம் சிம்பு. இதை அவரே தெரிவித்துள்ளார்.
இதன்முலம் நடிக்க ஏங்கி கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
