செயினை அடமானம் வைத்து இப்படி செய்தேன்.. PS 1க்கு கூல் சுரேஷ் அட்ராசிட்டி
கூல் சுரேஷ்
நடிகர் கூல் சுரேஷ் எல்லா படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வித்தியாசமாக விமர்சனம் சொல்லி பாப்புலர் ஆகி வருகிறார். அவர் இப்படி வெந்து தணிந்ததது காடு படத்திற்கு ப்ரோமோஷன் செய்ததால் அவருக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு ஐபோன் கிப்ட் ஆக வாங்கி கொடுத்திருந்தார். மேலும் சிம்புவும் அவருக்கு பேட்டியில் நன்றி கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தினை பார்ப்பதற்காக குதிரையில் ஏறி வந்திருக்கிறார் கூல் சுரேஷ்.
செயினை அடமானம் வைத்து இப்படி செய்தேன்
இந்நிலையில் அது பற்றி பேட்டி அளித்த அவர் அந்த குதிரை பொன்னியின் செல்வனில் விக்ரம் பயன்படுத்திய குதிரை. அது தான் வேண்டும் என கேட்டு வாடகைக்கு எடுத்தேன்.
செயினை அடமானம் வைத்துவிட்டு அந்த பணத்தில் தான் இப்படி செய்தேன் என கூல் சுரேஷ் கூறி இருக்கிறார்.
தனது தந்தை எம்.ஆர். ராதாவுடன் இளம் வயதில் நடிகை ராதிகா சரத்குமார்.. பலரும் பார்த்திராத புகைப்படம்