தொகுப்பாளருடன் சண்டை.. சிம்புக்காக நடுக்கடலில் விழுந்த கூல் சுரேஷ்..
கூல் சுரேஷ்
திரையுலகில் பிரபல நடிகரும், நடிகர் சிம்புவின் தீவிர ரசிகருமானவர் கூல் சுரேஷ். இவர் தற்போது ஒவ்வொரு படத்தின் முதல் காட்சிக்கு பின்பும் விமர்சனம் கூறுவதை செய்து வருகிறார்.
இவருடைய விமர்சனத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பத்து தல படத்திற்காக கூட ஹெலிகாப்டரில் வந்து இறங்கி விமர்சனம் கூறப்போவதாகவும் திட்டமிட்டுள்ளாராம் கூல் சுரேஷ்.
இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் நம்முடைய சினிஉலகம் youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நடுக்கடலில் விழுந்த கூல் சுரேஷ்
நடுக்கடலில் நடந்த இந்த பேட்டியில், சிம்புவை வைத்து தன்னுடைய விளம்பரத்திற்காக கூல் சுரேஷ் இப்படி செய்து வருகிறார் என ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று தொகுப்பாளர் கேட்க முதலில் பொறுமையாக பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ், ஒரு கட்டத்தில் தொகுப்பாளருடன் சண்டை போட்டு கோபமடைந்து படகிலிருந்து நடுக்கடலில் குதித்துவிட்டார்.
இதனால் அங்கிருந்த அனைவரும் பதற்றமடைந்தனர். இதன்பின் அங்கிருந்த நபர்களின் உதவியின் மூலம் கூல் சுரேஷை மீண்டும் படகிற்கு கொண்டு வந்தனர். அந்த பேட்டியில் இன்னும் என்னென்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டுமா..
இதோ அந்த பேட்டியின் முழு வீடியோ..
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாரா பிக்பாஸ் பாவனி- அவரே கூறிய செய்தி