பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கூல் சுரேஷ்.. பரபரப்பான ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் 7ல் ஐந்து நபர்கள் வைல்டு கார்டு போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். வந்த முதல் நாளே பிக் பாஸ் வீட்டாருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
குறிப்பாக தினேஷ் மற்றும் பிரதீப், பூர்ணிமா இடையே கடும் வாக்குவாதங்கள் வந்தன. மேலும் அர்ச்சனா, மாயா இடையே சில பிரச்சனைகள் வந்தது. இதில் அர்ச்சனா சற்று மனம் உடைந்துபோய் கண்கலங்கினார்.
அத்துடன் நேற்றைய நாள் முடிவுக்கு வந்த நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டினர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது.
வெளியேறும் கூல் சுரேஷ்
இந்த டாஸ்கில் கூல் சுரேஷுக்கு பிரதீப்-க்கும் இடையே ஏற்படும் வாக்குவாதத்தால் கூல் சுரேஷ் திடீரென வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கூறி, தனது பொருட்களை எல்லாம் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
