இந்த பாலாவுக்கு எங்கிருந்து தான் பணம் வருகிறது, விசாரணை செய்யனும்.. கூல் சுரேஷ் பேட்டி
KPY பாலா
தமிழ் சின்னத்திரையில் தனது திறமையை முழுவதுமாக வெளிக்காட்டி மக்களை சிரிக்க வைக்கும் பணியை செய்து வந்தவர் KPY பாலா.
அவரது வாழ்க்கை சிறப்பாக்க முதல் பெரிய மேடையாக அமைந்தது கலக்கப்போவது யாரு. அதில் கலக்கிய பாலா பிரபலம் அடைந்தாலும் தமிழகம் கொண்டாடும் பிரபலமாக மாறியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.
மிமிக்ரி, ஸ்டாண்ட்-அப் காமெடி மற்றும் நகைச்சுவை நடிப்பு ஆகியவற்றில் தனித்திறமை கொண்டவர். சின்னத்திரையில் கலக்கியவர் வெள்ளித்திரையில் நிறைய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் நாயகன் அவதாரம் எடுத்து கலக்கினார்.

கூல் சுரேஷ்
பாலா தனது உழைப்பில் வரும் பணம் அனைத்தையும் மக்களுக்காக செலவு செய்து வருகிறார். இப்போது இலவசமாக ஒரு மருத்துவமனை கட்டி வருகிறார், அவர் நல்ல எண்ணத்தில் இதையெல்லாம் செய்து வந்தாலும் அவர் மீது சில கடுமையான விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.
அப்படி சமீபத்தில் கூல் கூரேஷ் ஒரு பேட்டியில், பார்க்கிறவர்களுக்கு எல்லாம் உதவி செய்யும் அளவுக்கும் இலவச மருத்துவமனை கட்டும் அளவுக்கு இந்த பாலா பையனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வருது?

அவன் ஒன்னும் ராஜபரம்பரை, ஜமீந்தார் வீட்டு பையன் இல்லை, அவ்வளவு பணத்திற்கு அவன் பின்னால் யாரோ இருக்காங்க, அதை பற்றி விசாரணை செய்யணும் என பேசியுள்ளார்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri