முன்பதிவில் இத்தனை கோடி வசூல் செய்துவிட்டதா கூலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கூலி
நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இவர்களை தவிர்த்து யாரும் எதிர்பார்க்காத கேமியோ ரோலில் முன்னணி நடிகர் ஒருவர் நடித்துள்ளதாகவும் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.
முன்பதிவி
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் கூலி முன்பதிவில் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், இதுவரை நடந்து முன்பதிவில் மட்டுமே ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது.