முன் பதிவில் வசூல் வேட்டையாடும் கூலி.. இதுவரை எவ்வளவு தெரியுமா
கூலி
ரஜினிகாந்த் - லோகேஷ் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ் மற்றும் அமீர் கான் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கும் கூலி வருகிற 14ம் தேதி வெளியாகிறது.
முன் பதிவு
இப்படத்தை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கூலி படத்தின் முன் பதிவு துவங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள முன் பதிவில் மட்டுமே ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் வந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 14.6 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் முன் பதிவில் மட்டுமே ரூ. 100 கோடியை கூலி எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.