லியோவை விட அதிக வசூல் செய்த கூலி.. முன் பதிவிலேயே மாஸ் காட்டிய ரஜினி
கூலி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் அனிருத் இசையமைக்க சௌபின் சாஹிர், அமீர் கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
முன் பதிவு
வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் வெளிவரவிருக்கும் நிலையில், முன் பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லியோ படத்தின் வசூலை முன் பதிவிலேயே பின்னுக்கு தள்ளிவிட்டது கூலி.
லியோ படத்தின் USA Premiere 1.80 மில்லியன் வசூல் செய்திருந்தது. ஆனால், கூலி திரைப்படம் 1.86 மில்லியன் வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. அதுவும் முன் பதிவிலேயே செய்து மாஸ் காட்டியுள்ளது.