லியோ சாதனையை முறியடித்த கூலி.. 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
கூலி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
மேலும் நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரிலீஸ் ஆன இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் கூட வசூலில் முதல் நாளில் இருந்தே பட்டைய கிளப்பி வருகிறது கூலி.
வசூல்
இந்த நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 6 நாட்களில் ரூ. 425 கோடி வசூல் செய்துள்ளது.
இதற்கு முன் லியோ படம் 6 நாட்களில் ரூ. 421 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை கூலி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.