தமிழகத்தில் கூலி வசூலில் இவ்வளவு பெரிய ஏமாற்றமா!! எதிர்பார்த்தது நடக்கவில்லை
ஏமாற்றத்தை தந்த கூலி
கூலி படம் வெளிவந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 465 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரிலீஸ் ஆகி முதல் நான்கு நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பின் வசூல் குறைய துவங்கியது.
கேரளாவில் கூலி படம் கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என தகவல் வெளிவந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
எதிர்பார்த்தது நடக்கவில்லை
பிரம்மாண்ட பொருட்செலவில், ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகி வெளிவந்த கூலி படம், தமிழ் நாட்டில் ரூ. 200 கோடி வசூல் செய்து ரூ. 100 கோடி ஷேர் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை கூலி படம் தமிழ்நாட்டில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது. இறுதியாக ரூ. 145 கோடி வரை வசூல் வரும் என கூறப்படுகிறது. இதன்மூலம் ரூ. 70 முதல் ரூ. 75 கோடி ஷேர் கிடைக்கும்.
ஜெயிலர் படம்போல் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் எதிர்பார்த்த நிலையில், தற்போது ரூ. 75 கோடி மட்டுமே ஷேர் கிடைக்கும் என்பது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.