கூலி பட புகழ் நடிகர் உபேந்திரா மனைவி யார் தெரியுமா?.. நடிகையா, இந்த அஜித் படத்தில் நடித்துள்ளாரா, போட்டோ
கூலி படம்
நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின், ஸ்ருதிஹாசன், அமீர்கான் என பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் இப்படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் தான். படம் வெளியான நாளில் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது, ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் என தகவல் வந்துள்ளது.
நடிகர் மனைவி
இந்த கூலி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளவர் கன்னட சினிமா நடிகர் உபேந்திரா. இவரின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் பாராட்டு கிடைத்து வருகிறது.
தற்போது உபேந்திராவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக இவரா அது என ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி ஆகியுள்ளனர். அப்படி என்ன போட்டோ என்றால் நடிகர் உபேந்திராவின் மனைவியும் பிரபல நடிகையாம்.
தமிழில் நடிகர் அஜித் நடித்த ராஜா படத்தில் நாயகியாக நடித்த பிரியங்கா தான் உபேந்திராவின் மனைவியாம். தற்போது உபேந்திரா மற்றும் அவரது மனைவி எடுத்த போட்டோ தான் வைரலாகி வருகிறது.