அமெரிக்காவில் சாதனை படைத்த கூலி.. பிரீமியரிலேயே உச்சகட்ட வசூல்
சூப்பர்ஸ்டார் ரஜினியில் கூலி படம் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பெரிய அளவில் படத்திற்கு முன்பதிவு இருந்தது.
ம்கூலி படம் தற்போது அமெரிக்க ப்ரிமியரிலேயே பெரிய வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது.
சாதனை வசூல்
வட அமெரிக்காவில் மட்டும் கூலி படம் பிரீமியரில் $3.04 மில்லியன் வசூலித்து இருக்கிறதாம். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 26.67 கோடி ஆகும்.
இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகபட்சம் என வினியோகஸ்தரே அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Another movie, Another record for #SuperstarRajinikanth 👑🤩 #Coolie North America Premieres gross is $3,042,756 — Highest for any Tamil movie 🧨🔥 #Thalaivar dominating the box-office Worldwide 💥 Overseas release by @Hamsinient 🗺️ @sunpictures @PrathyangiraUS pic.twitter.com/gOPDei8vPv
— Hamsini Entertainment (@Hamsinient) August 14, 2025