வசூல் வேட்டையாடி வரும் கூலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிந்திருந்தனர்.
மேலும் ரஜினியின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், அமீர் கான், சௌபின் ஷாஹிர், உபேந்திரா, சத்யராஜ் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த கூலி திரைப்படம் ஏமாற்றத்தை தந்தது. விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தது. முதல் நான்கு நாட்கள் வசூல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன்பின் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்து வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 13 நாட்களை கடந்திருக்கும் கூலி படம் உலகளவில் ரூ. 495 கோடி வசூல் செய்துள்ளது. கூலி தமிழ் சினிமாவில் முதல் ரூ. 1000 கோடி வசூல் ஈட்டிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாபெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என என பலரும் கூறி வருகிறார்கள்.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
