8 நாட்களில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் கூலி.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், அமீர் கான் உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
வசூல்
இந்த நிலையில், 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கூலி படம் 8 நாட்களில் உலகளவில் ரூ. 440 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri