OTT-க்கு வரும் கூலி.. ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமேசான் ப்ரைம்
கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் கூலி. இப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

OTT
உலகளவில் இதுவரை ரூ. 515 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ளது. திரையரங்கில் கொண்டாடப்பட்ட கூலி திரைப்படம் எப்போது OTT-க்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 11ம் தேதி கூலி திரைப்படம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதோ அந்த அறிவிப்பு..
get ready to vibe with the saga of Deva, Simon, and Dahaa 🔥#CoolieOnPrime, Sep 11@rajinikanth @sunpictures @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja pic.twitter.com/Erjtef2o0C
— prime video IN (@PrimeVideoIN) September 4, 2025
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu