கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா
கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்தரா, நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட்
இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 375 கோடி என கூறப்படுகிறது. ரஜினியின் சம்பளம் ரூ. 150 கோடி, லோகேஷின் சம்பளம் ரூ. 50 கோடி, மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னீஷன்கள் அனைவரின் சம்பளமும் ரூ. 150 கோடி. மேலும் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் ரூ. 25 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர். மொத்தமாக இப்படத்தின் பட்ஜெட் ரூ. 375 கோடி ஆகும்.
ப்ரீ பிசினஸ்
அமேசான் ப்ரைம் நிறுவனம் கூலி திரைப்படத்தை ரூ. 130 கோடி வாங்கியுள்ளது. இப்படமா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது என்பதால், சாட்டிலைட் உரிமை மற்றும் ம்யூசிக் உரிமை இரண்டையும் சன் டிவி வைத்துள்ளது. இதில் சாட்டிலைட் உரிமை ரூ. 90 கோடி மதிப்பு என்றும், ம்யூசிக் உரிமை ரூ. 20 கோடி மதிப்பு என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் ப்ரீ பிசினஸில் மட்டுமே ரூ. 240 கோடி வந்துள்ளது.
இதுவே இப்படத்தின் ப்ரீ பிசினஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கமல் கன்னட மொழி சர்ச்சை; தமிழக முதல்வரின் கள்ள மௌனம் தமிழுக்கே அவமானம் - சீமான் கண்டனம் IBC Tamilnadu
