கூலி படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
கூலி
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
இவருடைய இணைந்து நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் அமீர் கான் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு பக்கம் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கூட, வசூலில் பட்டைய கிளப்பி வந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 1000 கோடியை தொடமுடியவில்லை என்றாலும், 14 நாட்களில் ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கூலி இணைந்து விட்டது. இந்த நிலையில், இப்படம் வெளிவந்து 20 நாட்கள் ஆகியுள்ளது.
இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 520 கோடி வசூல் செய்துள்ளது. கிட்டதட்ட இதுதான் கூலி திரைப்படத்தின் இறுதி வசூலாக இருக்கும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.