கூலி படம் குறித்து வெளிவந்த முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
கூலி
வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவரவிருக்கும் கூலி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள இப்படத்தில் அமீர் கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என பலரும் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி கூலி திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியிட்டு விழாவில் ரஜினியின் பேச்சை கேட்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் முதல் விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், கூலி திரைப்படத்தை பார்த்துவிட்டு அனிருத் மற்றும் அவருடைய கேங் சொன்ன விமர்சனத்தை பகிர்ந்துள்ளார் லோகேஷ். இந்த பேட்டியில், "அவங்களுக்கு பயங்கரமா புடிச்சிருக்குனு என்கிட்ட சொன்னாங்க. one of my best works-னு சொல்லிருக்காங்க" என அனிருத் மற்றும் அவரது கேங் தங்களது விமர்சனத்தை கூறியதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
