கூலி ஹிந்தியில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? எவ்வளவு தெரியுமா
கூலி
2025ம் ஆண்டு அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா மற்றும் அமீர் கான் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆனாலும் கூட உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 418 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
வசூல்
இந்த நிலையில், ஹிந்தியில் மட்டுமே கூலி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கூலி படம் ஹிந்தியில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளது. இது பாலிவுட்டில் இப்படத்திற்கு கிடைத்துள்ளது மாபெரும் வரவேற்பு என கூறுகின்றனர்.