ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் கூலி படத்தின் புது அப்டேட் இதோ!!
கூலி
நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வரும் அக்டோபர்- 10 வெளிவர இருக்கும் படம் வேட்டையன்.இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

அப்டேட்
இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், கூலி படத்தின் புது அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
அதன் படி, கூலி படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் இருக்கும் ஒரு மீன்பிடி துறைமுகத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது எனவும், ஆகஸ்ட் - 25 முதல் ரஜினிகாந்த் அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும், இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Like This Video
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu