OTT-யில் வெளிவரும் ரஜினியின் கூலி.. எப்போது தெரியுமா
கூலி
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர் கான், உபேந்திரா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், படத்தை பெரிதும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.

கலவையான விமர்சனங்கள் கூலி திரைப்படத்திற்கு வந்தாலும், வசூல் முதல் நான்கு நாட்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதன்பின் குறைய துவங்கிவிட்டது. கேரளாவில் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என்றும் Trade வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் பிக்பாஸ் 9வது சீசன் எப்போது ஆரம்பம்... இந்த CWC போட்டியாளர் உள்ளாரா?
OTT ரிலீஸ்
இந்த நிலையில், கூலி திரைப்படம் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் செப்டம்பர் மாதம் 12 அல்லது 13ம் தேதி அமேசான் OTT தளத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது.
