பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட கூலி திரைப்படம்.. மாஸ் காட்டிய ரஜினிகாந்த்
கூலி
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷோபின் ஷபீர் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் சிறப்பு நடனம் ஆடியுள்ளார்
பாலிவுட் நடிகர் அமீர் கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஓடிடி விற்பனை
இந்த நிலையில், கூலி திரைப்படத்தை அமேசான் ஓடிடி தளம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூப்பர்ஸ்டாரின் கூலி திரைப்படம் ரூ. 120 கோடி கொடுத்த அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.