ப்ரீ புக்கிங்கில் பட்டைய கிளப்பும் கூலி.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
கூலி
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினியின் கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா, அமீர் கான், நாகர்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி இப்படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியாகிறது.
ப்ரீ புக்கிங்
பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாட்டில் துவங்கிவிட்டது. இதன் விவரத்தை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது வரை இப்படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே கண்டிப்பாக மாபெரும் வசூலை செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.