கூலி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. அட இது சூப்பர் தேதியாச்சே..
கூலி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ஷோபின் ஷபீர், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் 70% சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 30% சதவீத படப்பிடிப்பு மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலீஸ் தேதி
இந்த நிலையில், கூலி திரைப்படம் மே அல்லது ஜூன் மாதம் வெளிவரும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கூலி திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான நிலையில், அதே தேதியில் கூலி படத்தையும் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.