கூலி பட ரஜினி போஸ்டரில் வாட்ச்சுக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. இதுதான் கதையா?
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதுதான் கதையா?
இந்நிலையில், கூலி படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கூலி என தலைப்பு வைப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் கை நிறைய வாட்ச்சுகளை வைத்துக் கொண்டு வில்லத்தனமாக சிரித்த போஸ்டர் வெளியானது நினைவிருக்கிறதா?
ஆம், அந்த போஸ்டரில் அத்தனை தங்க வாட்ச்சுகள் இருந்தது சும்மா இல்லை காரணத்தோடு தான்.
அதாவது, வின்டேஜ் தங்க வாட்ச்சுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் திருடப்பட்ட டெக்னாலஜியை பயன்படுத்தி, தேவா என்ற கடத்தல்காரர் தன் பழைய மாஃபியா கூட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கிறாராம்.
அவர் தன் டீமை கொண்டு வர நினைக்க அது தேவா நினைத்ததை விட பெரிய விஷயமாக புது உலகமாக மாறுகிறதாம். அந்த உலகில் குற்றம், பேராசை தான் ஆதிக்கம் செலுத்துகிறதாம்.

மன்னிக்கவே முடியாது; உயிரிழந்தவரின் சகோதரர் திட்டவட்டம் - கேரள நர்சுக்கு மரண தண்டனை உறுதி? IBC Tamilnadu
