1000 கோடி ரூபாய் வசூல் உறுதி.. சாதனை படைக்கபோகும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
கூலி
லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், நாகர்ஜுனா என உச்ச நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரூ. 1000 கோடி வசூல்
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படம் ரூ. 1000 கோடி வசூல் செய்யுமா, தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி வசூல் படமாக அமையுமா என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது.
காரணம் கூலி திரைப்படம் பாலிவுட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வெளிவந்தால் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலை அள்ளும் என கூறப்பட்டது. ஆனால், 8 வாரங்கள் OTT அக்ரீமெண்ட் போட்டால் மட்டுமே கூலி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளிவரும்.
இந்நிலையில், தற்போது 8 வாரங்களுக்கு OTT அக்ரீமெண்ட் போடப்பட்டுள்ளது என்றும், இதனால் வட இந்தியாவில் கூலி படத்தை மல்டிபிளக்ஸில் திரையிட முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து கூலி படம் சாதனை படைக்கும் என கூறுகின்றனர்.