சந்திரமுகி போல் உருவாகும் கூலி.. ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் சர்ப்ரைஸ்
கூலி
லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் இப்படத்திற்காக அவர் ரூ. 60 கோடி சம்பளம் வாங்குவதாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்து இருந்தார்.
கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கவுள்ளதாம். ஆம், வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள ரஜினிகாந்த், உடனடியாக ஜூன் மாதம் கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைகிறார்.
ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் சர்ப்ரைஸ்
சமீபத்திய தகவலின்படி, கூலி படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளாராம். மேலும் இப்படத்தில் இந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களும் இணைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்திற்கு தான் அதிகம் முக்கியத்துவம் இருக்கும். அதே போல் தான் கூலி படத்திலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என லோகேஷ் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் கூலி எப்படி வரப்போகிறது என்று.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
