கூலி அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த விநியோகஸ்தர்.. பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை
கூலி
2025ம் ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர், உபேந்திரா மற்றும் அமீர் கான் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த மாதம் திரைக்கு வந்த கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும், வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
அதிகாரப்பூர்வ வசூல்
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை வெளிநாட்டில் மட்டுமே $20 மில்லியன் வசூல் செய்துள்ளது என விநியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய மதிப்பில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வெளிநாட்டில் இதற்கு முன் 2.0 மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு படங்கள் $20 மில்லியன் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது திரைப்படமாக கூலி அந்த லிஸ்டில் இணைந்து மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
🌍🔥 #Coolie overseas gross hits $20M mark & still counting! 💥 A historic moment in global box office — the #SuperstarRajinikanth storm is unstoppable! 👑🎬
— Hamsini Entertainment (@Hamsinient) August 31, 2025
A heartfelt THANKS from #HamsiniEntertainment to #Thalaivar @rajinikanth , @sunpictures & the incredible fans around the… pic.twitter.com/i6xPWnrzHN

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri
