கூலி ப்ரீ புக்கிங் பாக்ஸ் ஆபிஸ்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா
கூலி
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ளார். நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ப்ரீ புக்கிங்
வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் வெளிவரவுள்ள நிலையில், அனைவரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிவிட்டது.
இதில் இதுவரை நடைபெற்று ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக கூலி திரைப்படம் ரிலீஸுக்கு முன் மாபெரும் அளவில் ப்ரீ புக்கிங்கில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.