சிம்பு படத்தில் வில்லனாகும் மலையாள நடிகர்.. பிரமாண்டமாக உருவாகும் கொரோனா குமார்
படம் நடிகர் சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்து காடு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் சிம்பு இப்படத்தை பிரமாண்டமாக எடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனால், திரையுலகில் உள்ள முன்னணி டெக்னீஷன்களை படங்களில் பணிபுரிய வைக்க முடிவெடுத்துள்ளாராம்.
மேலும், கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக, மலையாள நடிகர் பகத் பாசிலை நடிக்கவைக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் கொரோனா குமார் படக்குழுவிடம் இருந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan