இந்திய சினிமாவில் காஸ்ட்லி விவாகரத்து.. 380 கோடி ஜீவனாம்சம் கொடுத்த நடிகர்! யார் தெரியுமா?
சினிமா துறையில் காதல் திருமணம் மற்றும் சில காலத்தில் டைவர்ஸ் பற்றிய செய்திகள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன.
அது மட்டுமின்றி ஜீவனம்சம் பற்றிய விமர்சனமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் தற்போது எழுந்து இருக்கிறது.
நடிகை சமந்தா 200 கோடி ஜீவனாம்சத்தை வேண்டாம் என கூறிவிட்டார் என அவரை பாராட்டியும் சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.
காஸ்ட்லி விவாகரத்து
இந்நிலையில் இந்திய சினிமா துறையில் மிகவும் காஸ்ட்லி விவாகரத்து என ஹ்ரித்திக் ரோஷன் விவாகரத்தை தான் எல்லோரும் கூறுகின்றனர்.
ஹ்ரித்திக் ரோஷன் உடன் 2000 வருடம் முதல் 11 வருடங்கள் வாழ்ந்த சூசேன் விவகாரத்தின் போது 400 கோடி ஜீவனாம்சம் கேட்டார்.
இறுதியில் 380 கோடி ஜீவனாம்சம் தர ஹ்ரித்திக் ரோஷன் ஒப்புக்கொண்டார். இந்தியாவிலேயே காஸ்ட்லி விவாகரத்து செய்த நடிகர் இவர்தான் என தற்போது நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.