Couple Friendly திரை விமர்சனம்

By Tony Feb 15, 2026 05:15 AM GMT
Report

சினிமா என்றாலே லவ் ஸ்டோரிக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. அந்தளவிற்கு பல ஆயிரம் லவ் ஸ்டோரி வர, அஷ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் சந்தோஷ், மானஷா நடிப்பில் வெளிவந்துள்ள இந்த கபுள் ப்ரண்ட்லி இதில் எந்த வகை? பார்ப்போம்.

Couple Friendly திரை விமர்சனம் | Couple Friendly Movie Review

கதைக்களம்

நாயகன் சந்தோஷ் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல், வீட்டில் அப்பாவிடம் அவமானப்பட்டு காதலும் தோல்வியில் முடிந்து வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் பைக்-ல் ராபிடோ போல் ஒரு வேலை செய்து வருகிறார்.

அப்போது ஹீரோயின் மானஷாவும் வேலையில்லாமல் சென்னையில் அலைய, எப்படியோ இருவரும் சந்தித்து பிறகு நண்பர்களாக ஆகின்றனர்.

Couple Friendly திரை விமர்சனம் | Couple Friendly Movie Review

மானாஷா உதவியுடன் ஒரு சின்ன ப்ராஜெக்ட் சந்தோஷுக்கு கிடைக்க, அதன் பிறகு தொடர்ந்து பெரிய ப்ராஜெக்ட் கிடைக்கிறது.

இருவரும் லிவிங்-ல் வாழ தொடங்க, நாயகி மானாஷாவுக்கு மட்டும் வேலையே கிடைக்காமல் இருக்க ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் வேலையால் ஈகோ க்ளாஸ் ஆக இருவரும் பிரியலாம் என முடிவெடுக்க பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

பிளாக்பஸ்டர் ஆகியுள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பிளாக்பஸ்டர் ஆகியுள்ள வித் லவ் படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

படத்தை பற்றிய அலசல்

லவ் ஸ்டோரி என்பதால் படத்திற்கு மிக முக்கியம் கெமிஸ்ட்ரி தான். எல்லாம் நன்றாக இருந்து நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி க்ளிக் ஆகவில்லை என்றால் அது டோட்டல் டேமேஜ் ஆகிரும். அந்த வகையில் நாயகன் சந்தோஷ், நாயகி மானஷா கெமிஸ்ட்ரி படத்தின் மிகப்பெரிய பலம்.

நண்பர்களாக பழகி அப்படியே சந்தோஷ் ரூமிற்கு வந்து தங்கி, சந்தோஷ் வேலையில் பெரிய திருப்பம், பிறகு இவர்களுக்கள் காதல், ஊடல் என அவ்வளவு அழகாக இயக்குனர் அஷ்வின் அத்தனை அழகாக எடுத்துள்ளார்.

Couple Friendly திரை விமர்சனம் | Couple Friendly Movie Review

சந்தோஷ்-மானஷா காதல் காட்சிகள் அத்தனை ப்ரஷ் ஆக உள்ளது, முதல் பாதி முழுவதும் ஜாலியாக சென்றாலும் இவர்கள் காதலுக்கு மானஷா அப்பா ஜாதி பிரச்சனையாக அமைய, அவர் காதலுக்கு தடையாக வருவார் இதுதான் கதை என்றால், ஹீரோயினுக்கு ஹெல்த் வைஸ் வரும் பிரச்சனை படம் அப்படியே தலைகீழாகிறது.

இதுவரை செம ஜாலியாக சென்ற படம், பிறகு கிளைமேக்ஸ் வரை எமோஷ்னலை டஜன் கணக்கில் சுமந்து செல்கிறது. கொஞ்சம் ஒரு பேமஸ் ஹாலிவுட் லவ் படத்தின் சாயல் எட்டி பார்க்கிறது. அதை சொன்னால் கதை அப்படியே தெரிந்துவிடும் என்பதால் தவிற்கிறோம்.

அதோடு எதோ காதல் படம் வெறும் இரண்டு பேரை மட்டுமே சுற்றி நடக்காமல், சந்தோஷ் அண்ணன் மனைவி குழந்தை இல்லாமல் இருக்க, சமூகத்திற்காக அவர் எத்தனை ட்ரீட்மென்ட் எடுக்கிறார், இதனால் பெண்கள் எவ்வளவு வலிகள் அனுபவிக்கிறார்கள் என்பதை ஹீரோயின் அப்பாவின் முன்பு பேசும் காட்சிகள் சூப்பர். என்ன எவ்ளோ ப்ளஸ் இருந்தாலும், நாயகன் எந்த முயற்சியும் பெரிதும் எடுக்க மாட்டார்.

Couple Friendly திரை விமர்சனம் | Couple Friendly Movie Review

ஆனால், வேலை கிடைக்கவில்லை என புலம்புவார், தம், தண்ணீ தாண்டி சில போதை பொருள் வாயில் வைப்பதை எல்லாம் காட்டி, பிறகு காதலி வந்து அவரை நல்ல பாதைக்கு கொண்டு செல்வார் போன்ற அதர பழசான கேரக்டர் வடிவமைப்பை எப்போது தான் மாற்றுவார்களோ..

டெக்னிக்கல் ஒர்க் என பார்த்தால் எல்லமே டாப் நாச் தான், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் பிரமாதம்.

க்ளாப்ஸ்

நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி

எமோஷ்னல் காட்சிகள்

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

ஹீரோயினுக்கு பிரச்சனை என்றதும் இதுதான கிளைமேக்ஸ் என்று யூகிக்கும்படியே அடுத்தடுத்த காட்சிகள் இருப்பது.

மொத்தத்தில் இந்த Couple Friendly கண்டிப்பாக கப்புள்ஸுகளுக்கு ஒரு எமோஷ்னல் ரைட் தான், கண்டிப்பாக பார்க்கலாம். 

Couple Friendly திரை விமர்சனம் | Couple Friendly Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US