அனிருத் கச்சேரியை எதிர்த்து வழக்கு.. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
இசையமைப்பாளர் அனிருத் ஹுக்கும் என்ற பெயரில் சென்னை கூவத்தூரில் இன்று பிரம்மாண்ட கச்சேரி நடத்துகிறார். அதற்கு பல ஆயிரம் ரசிகர்கள் வர இருக்கின்றனர்.
இந்த கச்சேரிக்கு குடிநீர், கழிவறை என எந்த விதமான வசதிகளும் செய்யப்படவில்லை, மக்கள் செல்ல ஒரே ஒரு 30 அடி சாலை தான் இருக்கிறது, சாலை விரிவாக்கம் பணிகள் நடப்பதால் போக்குவரத்துக்கு சிக்கல் இருக்கும் என சொல்லி செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அனுமதி
வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கச்சேரி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டார். எந்த அசம்பாவிதமும் நடக்காமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி கூறி இருக்கிறார்.
அதனால் திட்டமிட்டபடி அனிருத் இசை கச்சேரி இன்று பிரம்மாண்டமாக நடப்பது உறுதி ஆகி இருக்கிறது.