சிம்பு நடிக்க தடையா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Parthiban.A Nov 10, 2023 03:40 PM GMT
Report

நடிகர் சிம்பு வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க சிம்புவிடம் ஒப்பந்தம் போட்டது வேல்ஸ் நிறுவனம்.

ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு சிம்பு வரவில்லை என கூறி வேல்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

சிம்பு நடிக்க தடையா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Denies To Ban Simbu From Acting

இந்த வாரமும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டபுள் எவிக்ஷனா?- வெளியேறப்போவது யார்?

இந்த வாரமும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டபுள் எவிக்ஷனா?- வெளியேறப்போவது யார்?

சிம்பு நடிக்க தடை இல்லை

கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் சிம்பு வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என வேல்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

சிம்பு தரப்பு வழக்கறிஞர் ஒரு கோடி ருபாய் உத்தரவாதத்திற்கான பணம் செலுத்த்தியதற்காக ரசீதை சமர்ப்பித்தார். அந்த தொகை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என கூறிய நீதிபதி, சமரசம் செய்வதற்கான வழக்கறிஞரை நியமித்து உத்தரவிட்டார்.

மேலும் சிம்புவுக்கு நடிக்க தடை விதித்தால் அவர் ஒப்பந்தம் செய்திருக்கும் மற்ற நிறுவனங்கள் தொழில் ரீதியாக பாதிக்கப்படும் என கூறி வேல்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். 

சிம்பு நடிக்க தடையா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Denies To Ban Simbu From Acting

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US