வலிமை ஓடிடி ரிலீஸுக்கு தடை கேட்டு வழக்கு! கோர்ட் அதிரடி தீர்ப்பு

Valimai Ajith Kumar Boney Kapoor H.Vinoth Zee5
By Parthiban.A Mar 23, 2022 10:00 AM GMT
Report

நடிகர் அஜித்தின் வலிமை படம் தற்போது தியேட்டர்களில் கிட்டத்தட்ட ஓடி முடிந்துவிட்டது. படம் 25 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

ஓடிடி ரிலீஸ்

ஜீ 5 இணையத்தளத்தில் வரும் 25ம் தேதி வலிமை படம் வெளியாகிறது. அதை எதிர்த்து மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

வலிமை படத்தின் கதை தான் தயாரித்த மெட்ரோ படத்தின் கதையை போல இருக்கிறது என ஏற்கனவே அவர் வழக்கு போட்ட நிலையில் அது பற்றி பதில் அளிக்கும்படி இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

வலிமை ஓடிடி ரிலீஸுக்கு தடை கேட்டு வழக்கு! கோர்ட் அதிரடி தீர்ப்பு | Court Denies To Ban Valimai Ott Release In Zee5

தடை விதிக்க முடியாது

வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வலிமை படத்தை ஓடிடி மற்றும் டிவியில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில் மெட்ரோ தயாரிப்பாளர் கேட்டிருந்தார்.

ஆனால் இயக்குனர் வினோத் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வலிமை ஓடிடி ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து உள்ளது.

 வலிமை ஓடிடி ரிலீஸுக்கு தடை கேட்டு வழக்கு! கோர்ட் அதிரடி தீர்ப்பு | Court Denies To Ban Valimai Ott Release In Zee5

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US