விஷாலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்! எதற்கு தெரியுமா?
விஷால் தற்போது கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் கைவசம் பல படங்கள் தற்போது இருக்கின்றன. அவர் நடிப்பில் வீரமே வாகை சூடும் படம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அது பொங்கலுக்கு வலிமைக்கு போட்டியாக ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது.
இந்நிலையில் விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 500 ருபாய் அபராதம் விதித்து இருக்கிறது. விஷால் அலுவலகத்தில் கடந்த 2016ல் ரெய்டு நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் 1 கோடி ருபாய் அளவுக்கு வரி காட்டாமல் இருப்பது தெரியவந்தது.
அதன் விசாரணைக்காக 10 முறை சம்மன் அனுப்பியும் விஷால் நேரில் வரவில்லை. அதனால் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 500 ருபாய் அபராதம் விதித்தது.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri