தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு இறுதி தீர்ப்பு வந்தது! இதோ..
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவரும் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த 2022 ஜனவரி 17ம் தேதி தாங்கள் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர். அது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து சில காலம் அவர்கள் சட்டப்படி விவாகரத்து வழக்கை பதிவு செய்யாமல் இருந்ததால் அவர்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பிருக்கிறதா என ரசிகர்களும் யோசித்தார்கள்.
விவாகரத்து அளித்த நீதிமன்றம்
இந்நிலையில் சமீபத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்து அதற்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் கதவுகள் பூட்டப்பட்டு ரகசியமாகவே நடத்தப்பட்டது.
இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பில் நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருக்கிறார்.
அதனால் அவர்கள் 2004 நவம்பர் 18ம் தேதி பதிவு செய்திருந்த திருமணம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
