ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு...
ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தேசிய விருது, பிலிம்பேர் விருது என நிறைய வாங்கியுள்ளார்.
மெலோடி கிங் என கூறலாம், இசையமைப்பாளர் என்பதை தாண்டி நடிகராக, பாடகராகவும் கலக்கி வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 202ம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். திடீரென இவர்கள் கடந்த 2024ம் ஆண்டு இருவரும் பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவித்தார்கள்.
அவர்கள் ஒரு முடிவு எடுத்தாலும் ரசிகர்களுக்கு இவர்கள் பிரிவது வருத்தமாகவே இருந்தது.
தீர்ப்பு
கடந்த வருடத்தில் இருந்தே இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கின் கடைசி தீர்ப்பு வெளிவந்துள்ளது.
12 வருட திருமண வாழ்க்கை கருத்து வேறுபாட்டால் தற்போது முடிவுக்கு வந்துள்ளது, அதாவது சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு விவாகரத்து வழங்கியுள்ளனர்.