லியோ அதிகாலை 4 மணி காட்சி.. பரபரப்பு தீர்ப்பு, ரசிகர்கள் அப்செட்
லியோ
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்திற்கு ஸ்பெஷல் ஷோ காலை 9 மணிக்கு என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், இதில் படத்தின் தயாரிப்பாளருக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். நேற்று நடைபெற்ற விசாரணையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தனர்.
தீர்ப்பு
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், அக்டோபர் 19 - 24ஆம் தேதிகளுக்கு இடையே காலை 7 மணி காட்சியை அனுமதிக்கும் விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசிடம் விட்டுவிடுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கண்டிப்பாக அதிகாலை 4 மணி காட்சி கிடையாது என தெரியவந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். 7 மணி காட்சி குறித்து அரசு தரப்பில் இருந்து ஆர்டர் வருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
