டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு

By Parthiban A Sep 17, 2026 12:52 PM GMT
Report

அருள்நிதி நடிப்பில் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் டிமாண்டி காலனி 3 படத்திற்கு தற்போது நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.

ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனம் தான் டிமாண்டி காலனி 3 மற்றும் 4 ஆகிய அடுத்தடுத்த படங்களை எடுக்க இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

ஆனால் தற்போது தங்களுக்கு தெரியாமல் பேஷன் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் மூலமாக டிமாண்டி காலனி 3 படத்தை தயாரித்து ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என ஒயிட்நைட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு | Court Stays Demonte Colony 3 Release

தடை

இந்த விவகாரம் சமரசத்தை எட்டும் வரை டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.

மேலும் இயக்குனர் அஜய் ஞானமுத்து விளக்கம் அளிக்க 4 வாரம் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US