அல்லு அர்ஜுன் நேரில் வர நீதிமன்றம் சம்மன்! பெண் உயிரிழந்த வழக்கில் பரபரப்பு

By Parthiban A Jun 19, 2026 02:02 PM GMT
Report

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரது 'புஷ்பா 2' படத்தின் ரிலீஸ் நேரத்தில் பிரீமியர் காட்சி பார்க்க வந்தபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகுதான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அவரது கைது அந்த நேரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அல்லு அர்ஜுன் நேரில் வர நீதிமன்றம் சம்மன்! பெண் உயிரிழந்த வழக்கில் பரபரப்பு | Court Summons Allu Arjun In Theater Stampede Case

சம்மன்

2024 டிசம்பர் 4 இரவு தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதைப் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வரும் திங்கட்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணைக்காக அல்லு அர்ஜுன் நேரில் ஆஜராக வேண்டும் என நாம்பல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US