பொய் சொன்னால் இனி படமே நடிக்க முடியாது.. விஷாலை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம்
நடிகர் விஷால் தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில் திடீரென நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தற்போது விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கும் நிலையில் அவரை நீதிபதி கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.
விஷாலிடம் பணமே இல்லையா?
லைக்கா நிறுவனத்திற்கு தரவேண்டிய பணம் 21 கோடியே 29 லட்சம் ரூபாயை விஷால் திருப்பி தரவில்லை. அது பற்றிய இந்த வழக்கில் விஷால் நீதிமன்றத்தில் 15 கோடி உடனே டெபாசிட் செய்ய உத்தரவிடப்பட்டது. அதை விஷால் தரப்பு செலுத்தவில்லை.
தன்னிடம் நிதி இல்லை என விஷால் தரப்பு கூறியதால் அவருடைய சொத்து விவரங்களையும், வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட்டையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

எச்சரித்த நீதிபதி
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது விஷால் தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை என கூறி இருக்கிறார்.
நீங்கள் கூறும் தகவல்களுக்கு மாறாக வங்கி கணக்கு விவரங்களில் இருப்பது தெரிய வந்தால் இனி எந்த படமும் நடிக்க முடியாத அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருக்கிறார்.
விஷால் தரப்பு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது. மேலும் மார்க் ஆண்டனி பட தயாரிப்பாளர் விஷால் இல்லை என்பதால், அந்த படத்தின் ரிலீஸ் மீது போடப்பட்ட தடை நீக்கும்படி கேட்டனர். அதை ஏற்று நீதிபதி ரிலீசுக்கு இருந்த தடையை நீக்கி இருக்கிறார்.
No objection in court to release the movie #MarkAntony, Stay vacated.#MarkAntony all set to release on Sep 15th Worldwide and 22nd in Hindi, GB#MarkAntonyFromSep15#WorldOfMarkAntony pic.twitter.com/4eXj0Og7Y8
— Vishal (@VishalKOfficial) September 12, 2023