நடிகர் விஜய்யின் லியோ படத்தில் இந்த கிரிக்கெட் வீரரா?- அவரே போட்ட அப்டேட், ரசிகர்கள் ஹேப்பி
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் இப்படம் எப்படிபட்ட கதைக்களம் என சரியாக தெரியவில்லை.
ரசிகர்களும் படத்தை பற்றி ஏதாவது தெரியுமா என தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஜய்யின் லியோ படத்தில் தமிழ் திரைபிரபலங்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் நடித்து வருகின்றனர்.
தற்போது படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து இணைந்து உள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.
தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது சமூக வலைதளத்தில் லியோ என்ற படத்தின் பெயரை இணைத்துள்ளார்.
அவர் இதற்கு முன் நடித்த மீசைய முறுக்கு, வீட்ல விவேஷம் போன்ற படங்களின் லிஸ்டில் லியோ பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் அவரும் லியோ படத்தில் நடிக்கிறார் என உறுதி செய்துள்ளனர்.
Custody படத்திற்காக நடிகை கீர்த்தி ஷெட்டி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?